'யு" சான்றிதழை பெற்றது தனுஷின் இட்லி கடை திரைப்படம்.!!
Seithipunal Tamil September 23, 2025 03:48 AM

முன்னணி நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 4-வது படம் ‘இட்லி கடை. தனுஷே இயக்கி நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

 டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அருண் விஜய் இந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து ‘இட்லி கடை’ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியானது. மேலும், கடந்த 20ந் தேதி கோவை புரோஷன் மாலில் ‘இட்லி கடை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில், ‘இட்லி கடை’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.