Lokah: மலையாள சினிமாவில் செஞ்சுரி அடித்த கல்யாணி பிரியதர்ஷனின் 'லோகா' திரைப்படம்!
TV9 Tamil News September 23, 2025 04:48 AM

மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில், பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan). இவரின் நடிப்பில் கடந்த 2025 ஆகஸ்ட் 28ம் தேதியில், உலகமெங்கும் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1: சந்திரா (Lokah Chapter 1: Chandra). இந்த படத்தை முன்னணி நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தயாரித்திருந்தார். இவரின் தயாரிப்பில் வெளியான இப்படமானது, பான் இந்திய வரையிலும் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது தென்னிந்தியாவில், பெண் லீட் கதைக்களத்தில் வெளியான படங்களில் அதிக வரவேற்பை பெற்ற படங்களில் முதல் இடத்தில் உள்ளது. லோகா படத்தின் ஒவ்வொரு காட்சிகளும், அப்படியே ஹாலிவுட் படங்களை போல இருந்தது என்றே கூறலாம்.

இந்த படத்தை மலையாள இயக்குநரான டோமினிக் அருண் (Dominic Arun) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது உலகளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படமானது வெளியாகி 4 வாரங்களான நிலையில், மலையாள சினிமாவில் மட்டும் லோகா, சுமார் ரூ 100 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி

லோகா படத்தின் மலையாள சினிமா வசூல் பற்றி படக்குழு வெளியிட்ட பதிவு :

#Lokah Crossed 100 Crores In Kerala Box Office 🔥🔥

UNSTOPPABLE BLOCKBUSTER 💥💥 4th Week 🔥#KalyaniPriyadarshan #Naslen #DulquerSalmaan #TovinoThomas #WayfarerFilms #LokahChapter1 pic.twitter.com/pngZgvJ9DL

— Wayfarer Films (@DQsWayfarerFilm)

லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

இந்த லோகா படமானது தற்போது வரையிலும், திரையரங்குகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் 4 வாரங்களை கடந்த நிலையில், இப்படமானது எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சரியான விமர்சனங்களை பாருங்க.. படம் எப்படி இருக்குனு நீங்க முடிவு பண்ணுங்க – தனுஷ் பேச்சு!

அந்த பதிவில் துல்கர் சல்மான், “லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. லோகா படம் விரைவில் ஓடிடியில் வரப்போவதில்லை, பொறுமையாக காத்திருங்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

லோகா படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி துல்கர் சல்மான் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

Lokah isn’t coming to OTT anytime soon. Ignore the fake news and stay tuned for official announcements! #Lokah #WhatstheHurry

— Dulquer Salmaan (@dulQuer)

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் கூட்டணியில் வெளியான இந்த லோகா படமானது, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாலிவுட் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பாலிவுட் நடிகைகள் பலரும் பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.