சிவகங்கை திருப்பத்தூர் அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மான கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேசியதாவது, "சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஏற்கனவே 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வரவில்லை என்றாலும், அவர் இந்திய அரசியலை எதிர்த்து செயல்படுகிறார். நாங்களும் அதையே செய்கிறோம்.
அதனால் அவர் எங்களுடன் சேர்ந்து நிற்பது தான் இயல்பாக இருக்க வேண்டும். புதிய பொருள் விற்கும் ஒருவர் தனி கடை தொடங்குவது போலவே விஜயும் தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார்.
நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிக்க மாட்டேன். ஏனெனில் திமுக அடுத்த கட்டத்தில் விஜய்க்கு ராஜ்யசபா சீட்டை வழங்க வேண்டும். அவர் ஒருநாள் திமுகவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது" என்றார்.