'ஜி.எஸ்.டி. 2.0' : இன்று முதல் விலை உயர வாய்ப்புள்ள பொருட்கள் இதோ..!
Top Tamil News September 23, 2025 06:48 AM

>துணிமணிகள்: ரூ.2,500க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு வரி 5% இலிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

>குல்ட் மெத்தைகள்: இந்த பொருட்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

> பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

> கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-ஆக இருந்தது.

> ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

> நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.

> குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.