“ஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதியாக்க மோடி உழைத்து கொண்டிருக்கிறார்”- தமிழிசை
Top Tamil News September 23, 2025 08:48 AM

நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை வெளிக் கொண்டு வருவதற்கு அதிக நிதி கொடுத்தவர் பாரதப் பிரதமர். அபிராமி அம்மன் கோவில் திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் இருந்தது திப்பு சுல்தான் காலத்தில் கீழே கொண்டு வந்து வைத்து விட்டனர். அதை மீண்டும் மேலே கொண்டு சென்று வைப்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பாக இருக்கிறது.

நாங்கள் கோட்டைக்கு செல்லும்போது இரட்டை இலையுடன் தாமரை மலரும். கலாச்சார போரை நிலை நிறுத்துவோம். திமுக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்கிறது, நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதற்கு உதாரணம் ஜிஎஸ்டி. வாக்கு திருட்டு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை கூறி வருகிறார்கள். ஹைட்ரஜன் பாம் போடுகிறேம் என்று சொல்கிறார்கள். பாரதப் பிரதமர் ஆப்ரேஷன் சிந்தூரையே நடத்திக் காண்பித்தவர். எந்த ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பாரத பிரதமர் வெற்றி பெறுவார், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். அரசியலில் இருந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் சுதந்திரத்திற்குப் பிறகு மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது.பெண்களின் குங்குமத்துக்கு ஆபத்து வந்தால், பிரதமர் மோடி பொறுத்துக்கொள்ள மாட்டார். ஒவ்வொரு பெண்ணையும் லட்சாதிபதி ஆக்க அவர் உழைத்து கொண்டு இருக்கிறார்!” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.