Rain Alert: இந்த வாரம் முழுவதும் மழை; சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியில் எந்தெந்த நாள்களில் மழை?
Vikatan September 23, 2025 09:48 AM

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை இருக்கும்.

இன்று முதல் வருகிற 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை சென்னையில்...

இன்றும், நாளையும் ஓரளவு மேக மூட்டம், இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை), ஓரளவு மேகமூட்டம் இருக்கும்.

வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை (செப் 25 - 27) ஓரளவு மேகமூட்டம், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கோவையில்...

இன்று முதல் வருகிற வியாழக்கிழமை வரை (செப் 22 - 25) ஓரளவு மேக மூட்டம் மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கின்றன.

வருகிற வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (செப் 26 - 27) ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

மதுரையில்...

இன்று முதல் வருகிற புதன்கிழமை வரை (செப் 22 - 24) ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது.

வருகிற வியாழக்கிழமை (செப் 25) ஓரளவு மேகமூட்டம் இருக்கும்.

வருகிற வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (செப் 26 - 27) ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் இருக்கிறது.

மழை புதுச்சேரியில்...

இன்றும், நாளையும் (செப்ப் 22 & 23) ஓரளவு மேகமூட்டம், இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

வருகிற புதன்கிழமை (செப் 26) ஓரளவு மேகமூட்டம் இருக்கும்.

அடுத்த இரண்டு நாள்கள் (செப் 25 - 26), ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.

வருகிற சனிக்கிழமை (செப் 27), ஓரளவு மேகமூட்டம் மற்றும் லேசான மழை இருக்கும்.

Himachal Rains: 69 பேர் மரணம்; ரூ.700 கோடி இழப்பு... இமாச்சலை புரட்டிப்போட்ட பருவமழை!
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.