GST 2.0 இன்று முதல் அமல் : எந்த பொருட்களின் விலை, எவ்வளவு குறையும்? | FAQ
Vikatan September 23, 2025 09:48 AM

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 'ஜி.எஸ்.டி 2.0' இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வகையாக வரிகள் இருந்து வந்தது. இன்று முதல், ஜி.எஸ்.டியில் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகள் மட்டுமே இருக்கப்போகின்றன.

5 சதவிகித வரி அத்தியாவசிய தேவை பொருள்களுக்கும், 18 சதவிகித வரி பிற பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் தாண்டி, ஆரோக்கிய கேடான பொருள்களுக்கு (Sin goods) 40 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இன்று முதல் அமலுக்கு வராது. இதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை, இப்போதிருக்கும் வரியே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி 2.0
இன்று முதல் எந்தெந்த அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி சதவிகிதம் குறைக்கப்படுகிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.
5 சதவிகிதமாக்க குறையும் அத்தியாவசிய மற்றும் பயன்பாட்டு பொருள்களின் பட்டியல்

() - கொடுக்கப்பட்டுள்ளது முன்னர் இருந்த வரி விகிதம்

பற்பொடி (12 சதவிகிதம்)

டூத் பிரஷ் (18 சதவிகிதம்)

டூத் பேஸ்ட் / டென்டல் ஃபிளாஸ் (18 சதவிகிதம்)

டாய்லெட் சோப் (18 சதவிகிதம்)

டால்கம் பவுடர் (18 சதவிகிதம்)

தலைமுடி எண்ணெய், ஷாம்பூ (18 சதவிகிதம்)

ஷேவிங் கிரீம், லோஷன் (18 சதவிகிதம்)

GST 2.0 குறையும் மாருதி கார்களின் விலை: Swift, Celerio, Baleno விலை என்ன?

மெழுகுவர்த்தி (12 சதவிகிதம்)

தீப்பெட்டி (12 சதவிகிதம்)

பால் புட்டி (12 சதவிகிதம்)

காட்டன் அல்லது ஜூட் ஹேண்ட் பேக் (12 சதவிகிதம்)

மண்ணெண்ணெய் பர்னர் அல்லது ஸ்டவ்கள் (12 சதவிகிதம்)

குடை (12 சதவிகிதம்)

தையல் மெஷின் (12 சதவிகிதம்)

சைக்கிள் (12 சதவிகிதம்)

உணவுப்பொருள்கள்

நெய், வெண்ணெய் (12 சதவிகிதம்)

உலர் பழங்கள் (12 சதவிகிதம்)

பாஸ்தா (12 சதவிகிதம்)

ஐஸ் கிரீம் (18 சதவிகிதம்)

பழம் மற்றும் காய்கறி ஜூஸ்கள் (12 சதவிகிதம்)

நெய் வரி எதுவும் இல்லை

பன்னீர் (5 சதவிகிதம்)

பிசா பிரெட் (5 சதவிகிதம்)

பரோட்டா வகையான பிரெட்டுகள் (18 சதவிகிதம்)

காக்ரா, சப்பாத்தி, ரோட்டி (5 சதவிகிதம்)

18 சதவிகித வரியாகக் குறைக்கப்படும் வீட்டு உபயோகப் பொருள்கள்

ஏ.சி (28 சதவிகிதம்)

டிஷ் வாஷிங் மெஷின் (28 சதவிகிதம்)

டி.வி, மானிட்டர், பிரோஜெக்டர் (28 சதவிகிதம்)

18 சதவிகிதமாக்க குறைக்கப்படும் வாகனங்கள்

பெட்ரோல் மற்றும் பெட்ரோல் - ஹைபிரிட், எல்.பி.ஜி. மற்றும் சி.என்.ஜி. கார்கள் (1200 சிசி மற்றும் 4000 மில்லி மீட்டரைத் தாண்டக்கூடாது) - (28 சதவிகிதம்)

டீசல் மற்றும் டீசல் - ஹைபிரிட் கார்கள் (1400 சிசி மற்றும் 4000 மில்லிமீட்டரைத் தாண்டக்கூடாது) (28 சதவிகிதம்)

மூன்று சக்கர வாகனங்கள் (28 சதவிகிதம்)

350 சிசி மற்றும் அதற்குக் குறைவான மோட்டார் சைக்கிள்கள் (28 சதவிகிதம்)

பொருட்களைக் கொண்டு செல்வதற்கான மோட்டார் வாகனங்கள் (28 சதவிகிதம்)

முழு பட்டியலைப் பார்க்க கீழே உள்ள Pdf-ஐ டௌன்லோடு செய்யுங்கள்! (GST Council வெளியிட்ட முழு அறிவிப்பு) அல்லது மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163555

GST ரத்து; மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை உயருமா? - சூழலை விளக்கும் நிபுணர்! GST 2.0 | FAQ - நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Q1: GST 2.0 என்றால் என்ன? எப்போது அமலுக்கு வந்தது?
A1: இந்தியாவின் பொருட்கள் & சேவைகள் வரி (GST) அமைப்பில் மாற்றம் செய்து, பல்வேறு சதவீத வரிகளை குறைத்து எளிமைப்படுத்திய புதிய முறைதான் GST 2.0. இது 2025 செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது.

Q2: GST 2.0-இல் எந்தெந்த புதிய வரி நிலைகள் உள்ளன?
A2: GST 2.0-இல் வரி நிலைகள் எளிமைப்படுத்தப்பட்டு மூன்று முக்கிய பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளன:

  • 5% மற்றும் 18% – பொதுவான பொருட்கள் மற்றும் சேவைகள்

  • 40% – ஆடம்பர / தீங்கு விளைவிக்கும் பொருட்கள் (உதா: புகையிலை, மதுபானங்கள்)

  • மேலும், சில அத்தியாவசிய பொருட்கள் 0% (வரி விலக்கு) பிரிவில் தொடர்கின்றன.

Q3: எந்த பொருட்கள் மலிவாகியுள்ளன?
A3: GST 2.0 மூலம் பல அன்றாட பயன்பாட்டு பொருட்கள் குறைந்த GST விகிதத்தில் வந்துள்ளன:

  • உணவுப் பொருட்கள் – பிஸ்கட், ஜாம், ஜூஸ், வெண்ணெய், நெய், பனீர் போன்றவை

  • பெர்சனல் ஹெல்த் கேர்  / வீட்டு உபயோக பொருட்கள் – சோப்புகள், தலைமுடி எண்ணெய், ஷாம்பு, பற்பசை, ஷேவிங் கிரீம் போன்றவை

  • மின்சாதனங்கள் – டிவி, ஏசி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் ஆகியவை 28%-இல் இருந்து 18%-க்கு குறைக்கப்பட்டுள்ளன

  • மருந்துகள் & மருத்துவ உபகரணங்கள் – சில மருந்துகள், சோதனை கருவிகள், காப்பீடு ஆகியவற்றில் வரிச்சலுகை

  • வாகனங்கள் – சிறிய கார்கள், பைக்குகள் மலிவான விலையில் கிடைக்கும்

Q4: எந்த பொருட்கள் அதிக விலை ஆனது?
A4: சில ஆடம்பர மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் GST 2.0-இல் 40% உயர் வரி பிரிவில் உள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

  • புகையிலைப் பொருட்கள், சில மதுபானங்கள்

Q5: நுகர்வோருக்கு எவ்வாறு சேமிப்பு கிடைக்கும்?
A5: GST 2.0-இன் காரணமாக மக்கள் பல துறைகளில் சலுகை பெறுகின்றனர்:

  • சிறிய கார்கள் மற்றும் பைக்குகள் விலை குறைந்துள்ளது

  • டிவி, ஏசி போன்ற மின்சாதனங்கள் 28%-இல் இருந்து 18%-க்கு குறைக்கப்பட்டதால் விலை குறையும்.

  • பிஸ்கட், பால் பொருட்கள், ஜாம் போன்ற அன்றாட உணவுப் பொருட்கள் மலிவாகின்றன

  • ரூ.7,500 வரை விலை கொண்ட ஹோட்டல் அறைகளில் தங்கும் செலவிலும் மிச்சப்படுத்தலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.