பஞ்சாங்கம் செப்.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil September 23, 2025 09:48 AM

பஞ்சாங்கம் செப்.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! Dhinasari Tamil %name%

astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – செப்.22

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

புரட்டாசி ~ .. 6 ( 22.9.2025 ) திங்கள் கிழமை*
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ புரட்டாசி மாஸம் { கன்யா மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 2.51வரை ப்ரதமை பின் த்விதியை
நாள் ~ {ஸோம வாஸரம்} திங்கள் கிழமை.
நட்சத்திரம் ~ 12.17 pm வரை உத்திரம் பின் ஹஸ்தம்
யோகம் ~ சுப்ரம்
கரணம் ~ கிம்ஸ்துக்னம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00.
எமகண்டம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
நல்ல நேரம் ~ 9.to 10.30am 5to.5.30 pm
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00.
சூரியஉதயம் ~ காலை 6.05
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ ப்ரதமை
இன்று ~ மஹாளய பக்ஷ முடிவு

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (22-9-2025) ராசி பலன்கள்

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்

வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கலைப்பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிலும் திருப்தி இல்லாத சூழல்கள் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : ஆதரவுகள் மேம்படும்.
பரணி : ஆர்வம் ஏற்படும்.
கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்

குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : குழப்பங்கள் விலகும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைக்கூடி வரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கடன் பற்றிய சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைகள் மறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சந்திப்புகள் ஏற்படும்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள்

தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாகன மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இழுபறியான சூழல்கள் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : இழுபறிகள் மறையும்.
ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்

கணவன் மனைவி இடையே புரிதல்கள் ஏற்படும். இறை பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பேச்சுகளில் பொறுமையை கையாளவும். அதிகாரிகளிடத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான செயல்கள் மூலம் சில மாற்றங்கள் பிறக்கும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

மகம் : புரிதல்கள் ஏற்படும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : மாற்றங்கள் பிறக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்

தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மாற்றமான அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். செயல்களில் அறிவாற்றல் வெளிப்படும். பழைய நினைவுகளால் மனதில் குழப்பங்கள் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : பேச்சுக்களில் கவனம்.
அஸ்தம் : வாதங்கள் மறையும்.
சித்திரை : குழப்பமான நாள்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்

பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். நண்பர்களிடையே அனுசரித்து செல்லுவது நல்லது. வாகன தொடர்பான விரயங்கள் நேரிடலாம். ரகசியமான முதலீடு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வர்த்தக விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

சித்திரை : பயணங்கள் ஏற்படும்.
சுவாதி : விரயங்கள் நேரிடலாம்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்

மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பாடங்களில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உயர்வுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொழுது போக்கு சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

விசாகம் : மந்த தன்மை குறையும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்

வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லறம் குறித்த தெளிவுகள் பிறக்கும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு விருப்பமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அலங்கார துறைகளில் லாபம் ஏற்படும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள்

உறவுகள் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கூட்டாளிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் .மனை சார்ந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : அனுபவம் கிடைக்கும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபகாரிய தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நிர்வாக துறைகளில் பொறுமையுடன் செய்லபடவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். முத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : முன்னேற்றமான நாள்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

பஞ்சாங்கம் செப்.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்! News First Appeared in Dhinasari Tamil

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.