கடந்த 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி மீது 2011ஆம் ஆண்டு ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்புத் துறை காவல்துறையினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் ஒழிப்புத் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Edited by Mahendran