திரைத்துறையில் ஒரு நடிகர் பிரபலமாக வேண்டுமெனில் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைய வேண்டும். திறமை இருந்தும் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய் இருக்கிறது. சிலர் கிடைத்த வாய்ப்புகளை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே கிடைக்க வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்வார்கள்.
அந்த வகையில் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கி ஒரு படத்தில் டெரர் வில்லனாக நடித்து அதன்பின் காமெடி நடிகராக மாறியவர் சென்ராயன். நவீன் இயக்கிய மூடர்கூடம் திரைப்படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. இந்த படத்தில் நவீன் பேசும் ‘இதுக்கு சிரிக்கக் கூடாது.. வெட்கப்படணும் சென்ராயன்’ என்கிற வசனம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
sendrayan
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இவருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் நடிகர் தனுஷ்தான். பொல்லாதவன் படத்தில் ஒரு சின்ன வருடத்தில் சென்ராயன் நடித்திருந்தார். அதன்பின் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திலும் சென்ராயன் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார். கோகுல் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த ரௌத்திரம் திரைப்படத்தில் டெரர் வில்லனாக அசத்தியிருந்தார் சென்ராயன். ஆனால் அந்த படம் ஓடவில்லை என்பதால் அதன்பின் இவர் வில்லனாக நடிக்கவில்லை.
மூடர்கூடம் திரைப்படத்திற்கு பின் காமெடி நடிகராக நடித்த தொடங்கியவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து ஹிட் அடித்த தலைவன் தலைவி படத்திலும் சென்ராயன் நடித்திருந்தார். தற்போது சினிமா விழா ஒன்றில் பேசிய சென்ராயன் ‘எனக்கு முதல் முதலாக வாய்ப்பு கொடுத்தவர் தனுஷ்தான்.
தனுஷ் சார் இல்லை என்றால் நான் இன்னைக்கு இல்லை. பொல்லாதவன் படத்தில் வெற்றிமாறன் சார் கேட்கும்போது தனஷ் சார் மட்டும் என்னை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் நான் பன்னி மேய்க்க போயிருப்பேன். இல்லனா ஆடு மேய்க்க போயிருப்பேன். அதுதான் உண்மை. தனுஷ் சாருக்கு நன்றி’ என ஃபீலிங்கோடு பேசியிருக்கிறார் சென்ராயன்.