சமூக ஊடகங்களில் அவ்வப்போது ஏதேனும் ஒரு காணொளி வெளியாகி வைரலாகும் அவ்வகையில் இப்போது வெளியான வைரல் வீடியோவில், ஒரு ஆசிரியர் தனது வீட்டு மொட்டை மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தெரிகிறது. ஆனால், அங்கு இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். மொட்டை மாடியின் ஒரு மூலையில் இருந்து மறுமூலை வரை மாணவர்கள் நிரம்பியுள்ளனர். எங்கு பார்த்தாலும் மாணவர்கள் மட்டுமே இருக்கின்றனர், அவர்களுக்கு அந்த ஆசிரியர் பாடம் நடத்துகிறார். இந்த பெரிய மாணவர் கூட்டம் தான் இந்த வீடியோ வைரலாகக் காரணம். ஆனால், இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது, இந்த ஆசிரியர் யார் என்பது பற்றிய தகவல்கள் தரப்படவில்லை.
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் *Just_Raghvi* என்ற கணக்கிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவுடன் “சிறிய கோச்சிங் சென்டர்” என்று கேப்ஷனில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 1,47,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், “இது சிறியதா?” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர், “கிராமத்தில் ஒரு சராசரி கோச்சிங்” என்று கூறினார். மூன்றாவது பயனர், “கான் சருக்கு போட்டியாக மாஸ்டர் வந்துவிட்டார்” என்று எழுதினார். இன்னொரு பயனர், “இவர் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பார், உறுதியாக” என்று கருத்து தெரிவித்தார்.