மாட்டுக்கறி ஏற்றியதாக சந்தேகத்தில் லாரிக்கு தீ வைப்பு; ஆறு பேர் கைது
WEBDUNIA TAMIL September 24, 2025 08:48 PM

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், மாட்டுக்கறி ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு லாரிக்கு, மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் குடாச்சியிலிருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்துக்கு பல டன் மாட்டுக்கறி கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அந்த லாரியை வழிமறித்த மர்ம கும்பல் அந்த லாரிக்கு தீ வைத்தது. காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள், லாரிக்குத் தீ வைக்கப்பட்டு அது முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெலகாவி காவல்துறை ஆறு பேரைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் லாரியை நிறுத்தி, மாட்டுக்கறி கடத்தியதாக ஓட்டுநரை குற்றம் சாட்டி, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இம்மாதிரியான சம்பவங்கள், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.