சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் ஐந்து உறுப்பினர்களும், இந்திய-அமெரிக்க உறவில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்துப் பேசினர். ஹெச்-1பி விசா சிக்கல்கள், 50% வரிவிதிப்பு, சபஹார் துறைமுகம் மீதான பொருளாதார தடைகள் போன்ற பல பிரச்சினைகள் குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். ஆனால், இந்த பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினர் ஏன் அமைதியாக உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற குழுவில் இருந்த ஒரு பெண் உறுப்பினர், தனது அலுவலகத்திற்கு ஒரு இந்திய-அமெரிக்க வாக்காளரிடமிருந்து கூட தொலைபேசி அழைப்போ அல்லது கடிதமோ வரவில்லை என்று கூறினார். இந்தியாவின் நலன்களுக்காகவும், கொள்கை மாற்றங்களை ஆதரித்தும் யாரும் பேசவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், தங்கள் தாய்நாட்டின் உறவுக்கு ஆதரவாக பேசுவதிலும், போராடுவதிலும் மௌனம் காப்பது வியப்பளிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க வேண்டும். ஹெச்-1பி விசா சிக்கல், வர்த்தக தடைகள் போன்ற விஷயங்கள் குறித்து பகிரங்கமாக பேச வேண்டும். இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்த, தங்கள் சமூகத்தின் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் தனது தாய்நாட்டின் உறவு குறித்து அக்கறை கொண்டால், அதற்காக போராடவும் பேசவும் முன்வர வேண்டும். அமெரிக்க நாடாளுமன்ற குழுவின் வருகை, இந்தியாவுக்கு அமெரிக்காவில் இன்னும் வலுவான ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள், இந்த உறவை பாதுகாப்பதில் தங்கள் பொறுப்பை உணர வேண்டும்.
மேற்கண்ட தகவல்களை காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் சசிதரூர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் கல்வி பயின்று, இந்தியாவில் அறிவை வளர்த்து, அமெரிக்க நாட்டின் முன்னேற்றத்திற்காக வேலை செய்து வரும் இந்தியர்கள், குறைந்தபட்சம் தங்கள் தாய்நாட்டிற்காக குரலாவது கொடுக்கலாமே, அதைகூட ஏன் செய்ய மாட்டேன் என்கிறார்கள், இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% மற்றும் எச்1பி விசா கட்டண உயர்வுக்கு ஒரு கண்டனக்குரல் கூட அமெரிக்க இந்தியர்கள் கொடுக்கவில்லை என்பதே சசிதரூரில் வருத்தமாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva