சென்னையில் இன்று செப்டம்பர் 23ம் தேதி இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதேபோல், மத்திய ஆந்திரப் பகுதிகளிலும் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 25ம் தேதி, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26ம் தேதி தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் அருகிலுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று, 27ம் தேதி கரையை கடக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23ம் தேதி சில இடங்களில், தென்தமிழகம், புதுவை, காரைக்கால், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 24, 25 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலையை பொறுத்தவரை பெர்ரிதான மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், சில இடங்களில் வெப்பநிலை 2–3°C வரை இயல்பை விட அதிகமாக இருக்கலாம்.
தென்தமிழக கடலோரம், வடதமிழக கடலோரத்திற்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 40–50 கிமீ வேகத்தில், இடைஇடையே 60 கிமீ வேகத்துடன் வீசக்கூடும். செப்டம்பர் 25 மற்றும் 26 தமிழக கடலோரங்கள் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் அதேபோல் சூறாவளிக்காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு & மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் 40–60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனையடுத்து மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?