பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. திராவிட மாடல் திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடி.
தன் அலட்சிய போக்கால், நிர்வாகமின்மையினால் 41 உயிர்கள் பலியானதற்கு காரணமாக இருந்ததோடு, உண்மைகளை மூடி மறைத்து, எதிர்க்கட்சிகள் மீது பழியை சுமத்த நினைத்த திமுகவின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது
உச்சநீதிமன்ற தீர்ப்பு. உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் சி பி ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லியிருப்பது திமுக வின் ஃபாஸிஸ அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு கிடைத்திருக்க கூடிய பதிலடி" என்று தெரிவித்துள்ளார்.