10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர் இல்லக் காப்பாளர் கைது; பயிற்சியாளர் தொல்லையால் மாணவி தற்கொலை?
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் பகுதியில் இருக்கும் சிறுவர் இல்லம் ஒன்றில், 10 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக, அதே இல்லத்தில் காப்பாளராக பணியாற்றிய 27 வயது இளைஞர் ஒருவரை சைதாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுவர் இல்ல காப்பாளர் சில நாட்களாக அந்த சிறுவனைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தெரிகிறது. சிறுவன் தசரா பண்டிகைக்காக விடுமுறையில் வீட்டிற்கு சென்றுள்ளான். விடுமுறை முடிந்து இல்லத்திற்கு திரும்பிச் செல்ல அவன் மிகவும் அஞ்சியுள்ளான். இது குறித்து அவன் தனது தாயிடம் முறையிட்டுள்ளான். அப்போதுதான், இல்லத்தில் காப்பாளரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவரத்தை அவன் தாயிடம் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து, சிறுவனின் தாய் உடனடியாக சைதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக சிறுவர் இல்ல காப்பாளரைக் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva