சிவகங்கையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பின்னர் பிரச்சாரத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “அனுமதி கேட்ட இடத்தில் காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும். ஏன் காவல்துறை மறுக்கிறது. காவல்துறையினர் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். உச்சநீதிமன்றம் பல கேள்விகள் கேட்டு தமிழக அரசின் தலையில் கொட்டு வைத்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் தாராளமாக புழங்குகின்றன. தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அரசை மக்களே கலைத்துவிடுவார்கள். தமிழை விற்று பிழைத்த கட்சி திமுக, தமிழைப் போற்றுவர்கள் நாம். ஆட்சியா நடத்தினீர்கள்? இந்த யாத்திரை திமுகவிற்கு முடிவுரை எழுதும். ஸ்டாலின் அவர்கள் ஆட்சி நடத்தாமல் வெறும் காட்சி நடத்துகிறார்.” என்றார்.