இன்று, தெற்கு ரெயில்வே நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்–சூலூர்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்–கூடூர் ரெயில் பாதையில் உள்ள தடா மற்றும் சூலூர்பேட்டை நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படும் சூலூர்பேட்டை பயணிகள் ரெயிலும், மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டையிலிருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு நெல்லூர் நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் இன்று இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கமான சேவை மீண்டும் தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?