அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறைப்படி சிறப்பு டெட் தேர்வுகளை வரும் ஜனவரி, ஜூலை, டிசம்பரில் நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டும் அல்லது ஓய்வு பெற வேண்டும் என்று உத்தரவிட்டது, இது ஆகஸ்ட் 23, 2010 க்கு முன்பு நாடு முழுவதும் நியமிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் ஆசிரியர்களைப் பாதிக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தமிழக அரசு திட்டுள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறைப்படி சிறப்பு டெட் தேர்வுகளை வரும் ஜனவரி, ஜூலை, டிசம்பரில் நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆண்டுக்கு மூன்று சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.