கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு
Vikatan October 15, 2025 04:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார்.

இவர் கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்துபோன வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாரையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாணார்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவர் கைது செய்யப்பட்டதையொட்டி தவெக நிர்வாகிகள் சாணார்பட்டி காவல்நிலையம் முன்பு குவிந்து கண்டன கோஷங்கள் எழுப்பியதோடு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தவெக நிர்வாகிகள் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் வைத்திருந்துவிட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார்

கைது செய்யப்பட்ட நிர்மல்குமாரை திண்டுக்கல் மாவட்ட ஜேஎம் 3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி அக்டோபர் 24ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.