இந்திய வம்சாவளி அமெரிக்க ஆய்வாளரும், தென் ஆசிய கொள்கை ஆலோசகருமான அஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் உயர்ரக ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நீதித்துறை தகவல்படி, வர்ஜீனியாவில் உள்ள டெல்லிஸின் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'டாப் சீக்ரெட்' மற்றும் 'சீக்ரெட்' ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றிய டெல்லிஸ், தற்போது வெளியுறவுத் துறை ஆலோசகராகவும், பென்டகனில் ஒப்பந்ததாரராகவும் உள்ளார்.
டெல்லிஸ் மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்க பாதுகாப்புக்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாக வழக்கறிஞர் லிண்ட்சே ஹாலிகன் தெரிவித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், டெல்லிஸுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
Edited by Siva