Bigg Boss 9 Tamil : டைட்டில் வின்னர்னு எல்லாம் சொன்னாங்களே.. சபரி முகத்திரையை கிழித்த கலையரசன்.. உண்மை வெளிய வந்துடுமோ?..
Tamil Minutes October 15, 2025 05:48 PM

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது பல போட்டியாளர்கள் நாடகமாடுவதாகவே தெரிகிறது. அதிலும் குறிப்பாக போட்டியாளராக உள்ளே நுழைந்த நந்தினி, இங்கே யாரும் உண்மையாக இல்லை என்றும் எனக்கு நடிக்க தெரியாது என்றும் உங்களைப் போல டைட்டிலுக்காகவும், கண்டன்டிற்காகவும் என்னால் அன்பு காட்டுவது போல் நடிக்க முடியாது என்றும் கத்தி கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

அவர் சொல்வது போலவே பலரும் தருணத்திற்கு ஏற்ப பிக் பாஸ் வீட்டிற்குள் நாடகமாடி வரும் சூழலில் ஒரு சில போட்டியாளர்கள் கொஞ்சம் நியாயமாக நடந்து வருவதாக கருத்து பரவலாக இருந்து வருகிறது. அந்த வகையில் விக்கல்ஸ் விக்ரம், திவாகர், சபரிநாதன் ஆகிய போட்டியாளர்கள் மிகச் சிறப்பாக ஆடி வருவதாகவும் பல பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே நிச்சயம் கடைசி வரைக்கும் முன்னேறுவார்கள் என்றும் தெரியும் நிலையில் சமீபத்தில் சபரிநாதனின் ஒரு நாடகம் பற்றி கலையரசன் சொன்ன சில வார்த்தைகள் பார்வையாளர்கள் மத்தியிலேயே ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் வாரத்தில் அனைத்து போட்டியாளர்களிடமும் டைட்டில் வின்னராக ஆவதற்கு தகுதியான ஆள் யார் என்ற கேள்வி கேட்கப்பட்ட போது பாதிக்கும் மேற்பட்டோர் சபரிநாதனின் பெயரை தான் தெரிவித்திருந்தனர். ஆனால் அவரைப் பற்றி பார்வதி மற்றும் திவாகர் ஆகியோரிடம் கலையரசன் சொன்ன வார்த்தைகள் அதற்கெல்லாம் தகுதியான ஆள் சபரிநாதன் தானா என்ற கேள்வியையே எழுப்பி உள்ளது.

இது பற்றி பார்வதி மற்றும் திவாகரிடம் பேசும் கலையரசன், “சமையல் என்ன செய்ய வேண்டும் என்பதை நானும் சபரிநாதனும் முடிவு செய்து விடுவோம். ஆனால் அதன் பின்னர் ஒவ்வொன்றாக இதை எப்படி செய்வது, இதை எப்படி செய்வது என கனியிடமும் மற்ற சில போட்டியாளர்களும் கேட்டபடியே செய்வதுபோல் நாடகமாடுகிறார் சபரி. மேலும் அவரது குரூப்பில் இருக்கும் கனி, ரம்யா மற்றும் பிரவீன் ஆகியோரிடம் கேட்டு செய்த பின்னர் அவர்களிடம் கேட்டு இதை செய்வது போன்று ஒரு பிம்பத்தையும் அவர் உருவாக்குகிறார்” என்றும் கூறுகிறார்.

மேலும், “நான் செய்த பல வேலைகளை தான் செய்ததாக கனி உள்ளிட்ட சில போட்டியார்களிடமும் சபரிநாதன் கூறினார். பாத்ரூமில் வேலை செய்யும் போதும் ஆட்கள் இல்லை என்றால் வேலை செய்யாமல் இருந்து விட்டு யாராவது வந்து விட்டால் உடனே தான் வேலை செய்வது போல ஒரு பாவனையை சபரி செய்கிறார்” என கலையரசன் கூற, பார்வதியும் அதிர்ந்து போகிறார்.

சிறந்த போட்டியாளர் என பெயர் எடுத்த சபரிநாதன் தற்போது எல்லா வேலையும் செய்வது போல ஒரு பாவனை காட்டுவதாக கலையரசன் சொல்லும் கருத்துக்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் வரும் நாட்களில் அவரது ஆதரவுக்கு பின்னடைவுகள் உருவாகவும் அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith V

நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

Author: Ajith V

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.