Investment Scam : ஆசை வார்த்தை கூறி மோசம் செய்த மோசடிக்காரர்.. முதலீட்டு மோசடியில் ரூ.15 லட்சத்தை இழந்த நபர்!
TV9 Tamil News October 16, 2025 08:48 AM

தொழில்நுட்பம் (Technology) நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே அளவுக்கு தொழில்நுட்பத்தை மையப்படுத்திய மோசடி மற்று குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக முதலீட்டு மோசடிகளின் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில், சண்டிகரை சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் ரூ.15 லட்சம் இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அந்த நபர் மோசடியில் பணத்தை இழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலீட்டு மோசடி – ரூ.15 லட்சத்தை இழந்த நபர்

சண்டிகரை சேர்ந்த பானு என்ற நபருக்கு ஜூன் 3, 2025 அன்று டெலிகிராம் செயலியில் பிரசாந்த் ஸ்ரீ என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். அவர், பானுவுக்கு ஒரு முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதாக கூறியுள்ளார். அதில் முதலீடு செய்தால் தினமும் ரூ.3,000, ரூ.5,000 லாபம் பெறலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமன்றி அந்த திட்டத்தில் இணைய முதற்கட்டமாக ரூ.10,999 முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கூறிய ஆசை வார்த்தைகளை உண்மை என நினைத்த பானு, அவர் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். அவரை நம்ப வைப்பதற்காக மோசடிக்காரர் பானு முதலீடு செய்த உடனேயே அவரது கணக்கில் ரூ.15,000-த்தை செலுத்தியுள்ளார். அதனை நம்பிய பானு தொடர்ந்து பணத்தை முதலீடு செய்ய தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : Festival Scam : பண்டிகை கால மோசடிகள்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

பல தவணைகளாக ரூ. 15 லட்சத்தை முதலீடு செய்த நபர்

தான் முதலீடு செய்த பணத்திற்கு உடனடியாக ரூ.15 கிடைத்த மகிழ்ச்சியில் பானு தொடர்ந்து முதலீடு செய்துள்ளார். ஒருசில வாரங்களிலேயே பல தவணைகளாக அவர் ரூ.15 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில், பானு தனது பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ரூ.2.44 லட்சம் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை நம்பி அவர் மீண்டும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இதையும் படிங்க : அமேசானில் வந்தது Add to Delivery.. இனி ஆர்டர் செய்த பிறகும் கூட பொருட்களை ஆட் செய்துக்கொள்ளலாம்!

ஆனால், இந்த முறை அவரது பணம் அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.