பருவமழை வெள்ள தடுப்பு பணிகள் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !
Seithipunal Tamil October 16, 2025 11:48 AM

சோழவரம், புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பருவமழை வெள்ள தடுப்பு பணிகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் சோதனை சாவடி அருகில் நெடுஞ்சாலைகள் சார்பில் பருவமழை வெள்ள தடுப்பு நடவடிக்ககைக்காக கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி அம்பால் நகர் பகுதியில்   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சியின் பொது நிதியில் ரூ.19.26 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிமெண்ட் கான்கீரிட் சாலை பணிகளையும்,தொடர்ந்து   பாடியநல்லூர் ஊராட்சி மகாமேரு நகர் பிரதான சாலையில்   ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சியின் பொது நிதியில் ரூ.37.73 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சிமெண்ட் கான்கீரிட் சாலை பணிகளையும், பின்னர் புழல் ஊராட்சி ஒன்றியம் தீர்த்தகரியம்பட்டு ஊராட்சி குமரன் நகர் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் மழைநீர் வரத்துக்கால்வாய்களை தூர்வாரி ஆழப்படுத்துதல்    பணிகளையும், அதேபகுதியை சேர்ந்த சோத்துப்பாக்கம் ஊராட்சி குமரன் நகர் பகுதியில்   நீர்வளத்துறை சார்பில் மழைநீர் வரத்துக்கால்வாய்களை தூர்வாரி ஆழப்படுத்துதல் பணிகளையும்,  நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறை  சார்பாக பருவமழை வெள்ளநீர் தடுப்பு நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணிகளை  மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
 
இதில் உதவி செயற்பொறியாளர் மாரிச்செல்வம், உதவி செய்பொறியாளர் யாஸ்மின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி (வ.ஊ), காளிஅம்மாள் (கி.ஊ) உதவி செய்பொறியாளர், உதவி நீர்வளத்துறை கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செய்பொறியாளர் மகேந்திரகுமார், உதவி நீர்வளத்துறை கொசஸ்தலையாறு வடிநிலக்கோட்ட செயபொறியாளர் மகேந்திரகுமார், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஜெயக்குமார், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசிகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.