தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிலம்பரசன் (சிம்பு), தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் ஒரு புதிய பதிவு போட்டுள்ளார். அதில் “My Bloods” என்று குறிப்பிட்டு, இயக்குநர் வெற்றிமாறனின் “அரசன்” படத்தின் பிரமோஷனல் வீடியோவை தியேட்டரில் பார்த்ததாக கூறியுள்ளார். அந்த அனுபவம் அருமையாக இருந்ததால், “நான் சொல்றேன், நீங்களும் கண்டிப்பா பாருங்க” என்று ரசிகர்களை அழைத்துள்ளார்.
தியேட்டரில் பார்க்கும் அனுபவத்தை மிஸ் செய்யாதீங்க என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த பதிவு சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் “அரசன்” படத்தை பார்க்கும் ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.