Biggboss Tamil 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லைவ் மூலம் சில அதிர்ச்சி விஷயங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நல்ல எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது. அந்த வகையில் போட்டியாளர்கள் பெரிய பிரபலம் இல்லாமல் உள்ளே வந்தனர். இதனாலே முதலில் பெரிய வெற்றி பெறுமா என எதிர்பார்க்கப்பட்டது.
ஆரோரா சின்ஹிலர், துஷார், திவாகர் என சமூக வலைத்தளத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய பிரபலங்களும், சின்னத்திரை நடிகர்களான சபரி, கம்ரூதின் என அதிகம் தெரியாத முகங்களே உள்ளே வந்து இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என நினைக்கப்படுகிறது.
அதிலும் ஆரம்பத்தில் இருந்தே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கொஞ்சம் திமிறுடன் பிக்பாஸ் சொல்வதை செய்யாமல் அவர்கள் போக்குக்கு இருந்து வருவதால் ரசிகர்கள் நீங்க இதை கூட செய்யாம இப்படி நடந்து கொள்வது சரியா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் எனக் கூறப்பட்டு வருகிறது. முதல் 5 சீசன்களுக்கு 24 மணி நேர லைவ் இல்லாமல் இருந்ததால் பல யூகங்களை முன் வைத்தனர். ஆனால் லைவ் டெலிகாஸ்ட் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்கள் அவர்களாகவே நிகழ்ச்சிக்கு தேவையான கண்டெண்ட் கொடுத்து வருவதை தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து லைவ் தொடங்கியதில் இருந்தே நிகழ்ச்சி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை போலவே இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு 24 மணிநேர லைவ் மேலும் அதிக விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
இதில் உள்ளே வந்திருக்கும் பிரபலங்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையால் சர்ச்சையை கிளப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபல விஜய் டிவி நடிகர் கம்ரூதின் தன்னை கெட்டவனாக நடிக்க சொல்லி அனுப்பியதாக சமூக வலைத்தள இன்ப்ளூயன்சரான அரோராவிடம் சொல்லி இருக்கிறார்.
இதை அவர் துஷாரிடம் கெட்டவன் தீம் கம்ரூதினுக்கு கொடுத்தாக சொல்லி இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஒரு போட்டியாளருக்கு தீம் கொடுத்து அனுப்புகிறார்களா இல்லை இதை கம்ரூதினே பரப்புகிறாரா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.
இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது கம்ரூதின் தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ள சொன்ன விஷயமாக கூட இருக்கலாம். இதன் காரணமாக தான் அந்த காட்சியை கட் செய்யாமல் பிக்பாஸ் டீம் உள்ளே நுழைத்து இருக்கிறார்கள் என்றும் சில குறிப்பிட்டு வருகின்றனர்.