இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் என்றால், அது ஹீரோ ஸ்பிளெண்டர் தான். ஆனால் மத்திய அரசின் புதிய GST 2.0 சீர்திருத்தங்களுக்குப் பிறகு, ஸ்பிளெண்டரின் ஆரம்ப விலை ரூ.73,764 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பலரும் மலிவு விலையில் அதிக மைலேஜ் தரும் மாற்று பைக்குகளைத் தேடி வருகின்றனர். அப்படியானவர்களுக்கு, ஸ்பிளெண்டரை விடக் குறைந்த விலையிலும், சிறந்த அம்சங்களுடனும் கிடைக்கும் சில மோட்டார்சைக்கிள்கள் இதோ!
1. ஹீரோ HF டீலக்ஸ் (Hero HF Deluxe)
ஸ்பிளெண்டரின் மலிவு பதிப்பாக கருதப்படும் இந்த பைக், 97.2cc இன்ஜினுடன் 7.91 bhp ஆற்றல் மற்றும் 8.05 Nm டார்க்கை வழங்குகிறது.
சுமார் 70 கிமீ/லி மைலேஜ், i3S தொழில்நுட்பம், மற்றும் 165 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை இதன் சிறப்புகள்.
விலை: ரூ.58,020 (எக்ஸ்-ஷோரூம்)
2. பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100)
அதிக வசதியும் மைலேஜும் இதன் பலம். 102cc இன்ஜின் மூலம் 7.77 bhp ஆற்றலும் 8.3 Nm டார்க்கும் உருவாகிறது.
70 கிமீ/லி வரை மைலேஜ் தரும் இதன் LED DRL, அலாய் வீல்கள், மற்றும் 200 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் நீண்ட பயணத்திற்கும் ஏற்றது.
விலை: ரூ.65,407
3. ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100)
ஸ்பிளெண்டருக்கு நேரடி போட்டியாளரான இந்த பைக், 98.98cc இன்ஜினுடன் 7.38 bhp ஆற்றல் மற்றும் 8.05 Nm டார்க்கை வழங்குகிறது.
55–60 கிமீ/லி மைலேஜ், CBS பிரேக்கிங், 9 லிட்டர் டேங்க், மற்றும் 168 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் இதன் பலம்.
விலை: ரூ.63,191
4. டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon)
பிரீமியம் தோற்றத்துடன் வரும் இந்த பைக், 109.7cc இன்ஜினால் 8.08 bhp ஆற்றலும் 8.7 Nm டார்க்கும் உருவாகிறது.
68.6 கிமீ/லி மைலேஜ், ரிவர்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே, யூஎஸ்பி சார்ஜர், மற்றும் லோ பேட்டரி இன்டிகேட்டர் போன்ற நவீன அம்சங்களுடன் வருகிறது.
விலை: ரூ.66,300
5. டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport)
ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் மலிவு விலையில் வரும் இந்த 109.7cc பைக், 8.18 bhp ஆற்றலும் 8.3 Nm டார்க்கும் வழங்குகிறது.
70 கிமீ/லி மைலேஜ், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், மற்றும் டிஜிட்டல்-அனலாக் கிளஸ்டர் இதன் முக்கிய அம்சங்கள்.
விலை: ரூ.58,200
ஹீரோ ஸ்பிளெண்டர் இன்னும் நம்பகத்தன்மையில் முன்னணியில் இருந்தாலும், இப்போது இந்திய சந்தையில் ரூ.60,000–₹66,000 விலையில் அதே தரத்தில், மேலும் மைலேஜ் தரும் பல பைக்குகள் கிடைக்கின்றன.நீங்கள் தினசரி பயணத்திற்கு பொருத்தமான, எரிபொருள் சிக்கனமும் பராமரிப்பு செலவிலும் குறைந்த பைக்கைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஐந்து மாடல்களில் ஒன்றை கண்டிப்பாக பரிசீலிக்கலாம்.