நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.. விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..!
WEBDUNIA TAMIL October 16, 2025 06:48 PM

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பலமான விமர்சனங்களை முன்வைத்தார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், "கரூர் நிகழ்ச்சியில் அரசு உரிய கவனம் செலுத்தாததால், விஜய்க்கும், அவரை காண வந்த தொண்டர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று குற்றம் சாட்டினார். சமீபத்திய மெரினா சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், "எதிர்க்கட்சிகளை போல நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. விஜய் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம்" என்று விளக்கினார்.

கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, "கூட்டணி நடக்கலாம், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாங்கள் கூட்டாக அரசாங்கத்தை எதிர்ப்போம். அது கூட்டணியா, கூட்டாகவா என்பதை வருங்காலம் முடிவு செய்யும்" என்று கூறி, த.வெ.க.வுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உணர்த்தினார்.

தேர்தல் நெருங்கும்போது மக்கள் திமுக-வின் சாயம் வெளுக்கப்போகிறார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.