கேரளாவின் கல்லியூர் மாவட்டத்தில் உள்ள புன்னமூடு அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் ஒரு மாணவன் பெப்பர் தூள் ஸ்பிரே அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவன் ஒருவன் கொண்டு வந்த பெப்பர் தூள் ஸ்பிரேயை, வகுப்பறையில் மின்விசிறிக்கு கீழே அடித்ததால், அங்கு இருந்த ஒன்பது மாணவர்களும், அவர்களுக்கு உதவ வந்த ஒரு ஆசிரியரும் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர்.
உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலையிட்டு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, ஆசிரியர் மற்றும் மற்ற மாணவர்களின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது. எனினும், மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஒரு மாணவர் மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவனிடம் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Edited by Siva