ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 57 பேரில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்த பயணிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?