தைவானை சேர்ந்த மின்னணு தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் இந்திய தலைவர் ராபர்ட் வூ, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை சந்தித்தார்.
சந்திப்புக்கு பின் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடி முதலீடு செய்து, 14,000 வேலைவாய்ப்புகளை உறுதி அளித்துள்ளது" என்று அறிவித்தார்.
ஆனால், இதற்கு பதிலளித்த பாக்ஸ்கான் தரப்பு, "முதல்வர் சந்திப்பின்போது புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை" என்று கூறியது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த முரண்பட்ட தகவலால் முதலீட்டின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த தொழில்துறை அதிகாரி ஒருவர், "பாக்ஸ்கான் சில மாதங்களுக்கு முன்பே ரூ. 15,000 கோடி முதலீட்டை உறுதியளித்தது. ரகசியம் காக்குமாறு நிறுவனம் கேட்டதால் தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது நிறுவனம் மறுத்தாலும், முதலீடு உறுதியானது" என்று தெரிவித்தார்.
Edited by Siva