பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: திடீரென பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்..!
Webdunia Tamil October 16, 2025 11:48 AM

தேர்தல் வியூக வல்லுநரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு பிகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை எதிர்த்து தான் நேரடியாக களமிறங்க போவதாக அவர் சவால் விடுத்திருந்தார். ஆனால், தற்போது தனது ஜன சுராஜ் கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் இந்த திடீர் பின்வாங்கல், அவர் முன்னணி தலைவரை எதிர்ப்பதில் இருந்து விலகுகிறாரா அல்லது கட்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து வியூகம் வகுக்க விரும்புகிறாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிகாரில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஜன சுராஜ் கட்சியின் தாக்கம் போட்டியில்லை என்ற முடிவால் இனி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.