தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கான அனுமதி வழங்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 9,207 கடைகளுக்கு தீயணைப்பு துறையினர் தடையின்மைச் சான்று (NOC) வழங்கியுள்ளனர்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வெளியிட்ட தகவலில், தீபாவளி காலத்தில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 384 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பண்டிகைக் காலத்தில் தொடர்ந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் மட்டும் 1,088 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யாத 89 கடைகளுக்கு தடையின்மைச் சான்று மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட 2,705 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் செய்முறை விளக்கங்களும் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?