தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர், “நாம் பேசினது சபாநாயகருக்கு கேட்கவில்லை போலிருக்கே!” என தங்களுக்குள் உரையாடினர்.
அதை கவனித்த சபாநாயகர் அப்பாவு, நகைச்சுவை கலந்த சிரிப்புடன்,“நீங்கள் ‘எனக்கு கேட்கவில்லை’ என்று சொன்னது எனக்கு கேட்கிறது... எனக்கு பாம்பு காது!" என்று பதிலளித்தார்.
மேலும், சபாநாயகரின் இந்த நையாண்டி பதில் அவையில் இருந்த உறுப்பினர்களை சிரிப்பில் ஆழ்த்தியது. அந்த சில நொடிகள் சட்டசபை முழுக்க சிரிப்பு வெள்ளம் சூழ்ந்தது.