தீபாவளியையொட்டி நேற்று 4 திரைப்படங்கள் வெளியாயின. இதில் பைசன் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நெல்லையைச் சேர்ந்த மணத்தி கணேசன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இபடத்தினை இயக்கி உள்ளார். துருவ் விக்ரம் இக்கதைக்கு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் பைசன் குறித்து விமர்சனத்தை கூறியுள்ளார். அதில் இந்த கதை ஜெயிப்பதற்கான அனைத்து தகுதிகளும் உள்ள கதை. சுமாராக எடுத்தாலும் வெற்றி பெரும். ஆனால் இயக்குனர் படத்தின் முதல் காட்சியிலேயே இறுதிக் நிமிட காட்சியை வைத்துவிட்டார். இதனால் படத்தின் வரும் நல்ல திருப்பங்கள் கூட எடுபடாமல் போய்விட்டது. இதிலேயே அவர் வெற்றியை கோட்டை விட்டுவிட்டார்.
அதேபோன்று ஹீரோவை எப்போது யார் விக்ரமை தள்ளிவிட்டாலும் சேற்றில் மட்டுமே விழுகிறார் . அது எதற்கு என்று தெரியவில்லை. ஒருவேலை அது குறியீடாக வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை.
படத்தின் நீளமும் ஒரு மைனஸாக உள்ளது. ஹீரோயின் கேரக்டர் தேவையில்லாதது.
மொத்ததில் இப்படம் நல விறுவிறுப்பாக வந்திருக்க வேண்டிய படம் மிக சுமாரான படமாக வந்துள்ளது எனக் கூறியுள்ளார்.