கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பேரழிவைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த அக்டோபர் 13ஆம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கரூரில் நேரில் விசாரணைக்காக வந்துள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான குழுவில் ஏ.டி.எஸ்.பி. முகேஷ் குமார் மற்றும் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோரும் இணைந்துள்ளனர். அவர்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெறுவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். அதிகாரிகள் இன்று அல்லது நாளை விசாரணையைத் தொடங்குவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?