சோஷியல் மீடியாவில் தினமும் ஏதாவது ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தவோ அல்லது சிரிக்கவோ வைக்கிறது. சமீபத்தில் அதுபோல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் ஸ்கூட்டியை அதிவேகமாக ஓட்டியவாறு சாலையில் வருகிறார்.
ஆனால் எதிரில் இருந்த வாகனத்தை கவனிக்காமல் ஸ்கூட்டியை நேராக நிறுத்தப்பட்டிருந்த காரில் மோதுகிறார். மோதிய தாக்கத்தில் அவர் காரின் மேல் பாய்ந்து கீழே விழுகிறார். அந்த காட்சி பார்த்தவர்கள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வீடியோவை X பக்கத்தில் @poojaofficial5 என்ற யூசர் பகிர்ந்துள்ளார். அவர் “எதற்கு இவ்வளவு அவசரம், திடி?” என்ற கேப்ஷனுடன் வீடியோவை வெளியிட்டதும், அது சில மணி நேரங்களிலேயே வைரலாகி விட்டது. வீடியோவில் பெண் ஒருவர் ரோட்டில் அதிவேகமாக வருகிறார், தூரம் சரியாக கணக்கிடாமல் போனதால் காரில் மோதுகிறார்.
அந்த தருணம் ஒரு ஆக்ஷன் படக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த வீடியோவுக்கு கீழ் நெட்டிசன்கள் பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவர் “இத்தனை வேகமா பறந்தது பார்த்தா ISRO-வில் வேலைக்கு போடணும்!” என்று சிரித்துக் கூறியுள்ளார்.
மற்றொருவர் “சந்திரனுக்குப் போகணும் என நினைச்சுட்டா போல” என்று எழுதியுள்ளார். இன்னொருவர் “நான் பின்னாடி இருந்திருந்தா நேரா வேன்ல போயிருப்பேன்!” என நகைச்சுவையாக கூறியுள்ளார். சிலர் இதைப் பார்த்து “Fast & Furious” அடுத்த பாகத்துக்கு இவரையே ஹீரோயினா எடுக்கணும்!” என கலாய்த்து வருகிறார்கள்.