பொதுவாக நமக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பல வகை பழங்களில் சீதா பழமும் ஒன்று .இந்த சீதா பழத்தை எப்படி சாப்பிட்டால் நாம் முழுமையான ஆரோக்கியம் பெறலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சீதாப்பழத்தில் உள்ள மெக்னீசியம் நமக்கு , மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்
2.சீதாப்பழச்சாறு நன்மை பயக்கும் .அந்த பழ ஜூஸ் குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
3.சீதாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் அதன் மூலம் நமக்கு சளி பிடிக்காது.
4.சீதாப்பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது.
5.இந்த வைட்டமின் பி சத்து ஆஸ்துமா பிரச்சனை நம்மை அண்டாமல் பாதுகாக்கும்.
6.சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் நம் உடம்பில் சேராது காக்கும்.
7. சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
8.மேலும் எடை குறைக்க நினைப்பவர்கள் சீதாப் பழம் உண்ணலாம்.
9.சீதா பழத்தில் நார்ச்சத்து மூலம் , நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். . இதனால் அதிகம் சாப்பிடாமல் நம்முடைய உடல் எடையை கணிசமாக குறைக்க முடியும்.
10.சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மையாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும்.
11. சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து தொடர்ந்து பருகி வர, நம்முடைய நரம்புகள் வலுப்படும்.