மகனை வைத்து ரிஸ்க் எடுக்கும் விஷ்ணுவிஷால்.. ஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாதே
CineReporters Tamil October 21, 2025 01:48 PM


தமிழ்  சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர் நடிகர் விஷ்ணுவிஷால். வெண்ணிலா கபடிக்குழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் அவருக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. அவர் நடித்த படங்கள் எல்லாமே விஷ்ணு விஷாலுக்கு கைக் கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ராட்சசன் படம் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வெளிக்காட்டி படமாகும்.

அவர் கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால்சலாம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு அவர் ஆர்யன் என்ற திரைப்படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வருகிற 31 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என வெவ்வேறு மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது. படத்தின் முதல் பாடல் சமீபத்தில்தான் வெளியானது. கொள்ளாதே கொள்ளை அழகாலே என்ற அந்தப் பாடலை வாமனன் வரிகளில் ஜிப்ரான் தான் பாடியுள்ளார்.

இந்த நிலையில் படத்தை பற்றி விஷ்ணு விஷால் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது ராட்சசன் திரைப்படம் அவருக்கு இந்தியா முழுக்க பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததாகவும் அதே போல் கட்டா குஸ்தி படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி மேலும் பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது என்றும் கூறினார். அதை போல் ஆர்யன் திரைப்படமும் எனக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றும், 

அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்திற்கு ஆர்யன் என தன் மகனின் பெயரை வைத்திருப்பதாகவும்  அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.