நடிகர் விஷால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மகுடம். ஈட்டி, ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தை தானே இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் விஷால்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "எனது புதிய படமான ’மகுடம்’ படத்தின் 2-வது பார்வையை (2nd look) தீபாவளி வாழ்த்துகளுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. அதோடு படப்பிடிப்பின் ஆரம்பகட்டத்தில் நான் எடுத்த நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் முடிவை தெளிவுபடுத்துகிறேன், இது நான் இயக்குநராக அறிமுகமாகும் படமாக இருக்கும்.
இந்த தருணத்தை எதிர்பார்க்கவில்லை ஆனால் சூழ்நிலைகள் என்னைப் படத்தில் கிரியேட்டிவாக மறுவேலைப்பாடுகள் செய்து நானே இயக்கும் இடத்துக்குக் கொண்டுவந்துள்ளன. கட்டாயத்தினால் அல்ல பொறுப்புணர்வால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
ஒரு நடிகராக, சினிமா என்பது எங்களை நம்பும் பார்வையாளர்களுக்கும், ஒவ்வொரு திட்டத்திலும் தங்கள் நம்பிக்கையையும் கடினமாக சம்பாதித்த பணத்தையும் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு உறுதிப்பாடு என்று நான் எப்போதும் நம்பியுள்ளேன்.
இப்போது இந்த மகுடம் படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்பதுதான், தயாரிப்பாளரின் முயற்சிகள் பாதுகாக்கப்படுவதையும், வணிக சினிமாவில் பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதையும் உறுதி செய்ய சரியான முடிவாகும்.
சில நேரங்களில், சரியான முடிவை எடுப்பது என்பது பொறுப்பை ஏற்பது...
இதுதான் இந்த தீபாவளி எனக்கு உணர்த்துகிறது." எனக் கூறியுள்ளார்.
Vishal: "3 நாட்களுக்கு ரிவியூ எடுக்காதீர்கள்... ஆக. 29ல் நல்ல செய்தி" - விஷால் பேச்சு!