தென்னிந்தியாவின் டாப் நடிகை சமந்தா, இந்த ஆண்டு தீபாவளியை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடியுள்ளார். அவரது தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. அதில், சமந்தா தனது காதலராக கூறப்படும் இயக்குனர் ராஜ் நிடிமோரு மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமந்தா மீண்டும் காதலில் விழுந்துள்ளார் என்ற வதந்திகள் கடந்த சில மாதங்களாகவே பரவி வந்தன. தற்போது வெளியான புகைப்படங்கள் அந்த வதந்திக்கு மேலும் வலுசேர்த்துள்ளன. ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸின் மூலம் ராஜ் இந்திய அளவில் பிரபலமானார்.
அதில் சமந்தாவும் நடித்த ‘ஃபேமிலி மேன் 2’ வாயிலாக இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சமந்தா ராஜ் உடன் தீபாவளி கொண்டாடியிருப்பது, “இது அவர்களின் உறவை மறைமுகமாக உறுதி செய்கிறதா?” என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மயோசிடிஸ் நோயிலிருந்து மீண்ட பிறகு சமந்தா மீண்டும் சினிமாவில் முழு உழைப்புடன் செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் ‘சுபம்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பாளராக தயாரித்துள்ளார். அதேசமயம் பாலிவுட்டில் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் சர்ச்சை கிளப்பியுள்ளதால், ரசிகர்கள் “சமந்தா மீண்டும் சந்தோஷமாக இருக்கட்டும்” என்று வாழ்த்தி வருகின்றனர்.