விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை கழிவறையில் சொருகிய நிலையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பின்புறம் வழியாக உள்ள பொதுக்கழிப்பறை கோப்பைக்குள் பச்சிளம் ஆண் குழந்தை தலை சொருகி ரத்தம் சிதறிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு காலையில் அந்த இடத்திற்கு சென்ற நபர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கும் மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் இரவு அல்லது அதிகாலை பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி பெண் கழிவறையில் பெற்ற குழந்தையை கொன்று கோப்பையில் சொருகி விட்டு சென்றிருக்கலாம் என யோசித்தனர். இதன்படி பிரசவ வார்டு அவசர விபத்து பகுதி மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது அவசரமாக நேற்று முன்தினம் இரவு வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பச்சிளம் குழந்தையை பெற்றெடுத்து கழிவறையில் வீசி சென்றது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அய்யயோ! பிஞ்சு குழந்தை வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்! அரியலூரில் பரபரப்பு...!
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் விவரத்தை தேடி வரும் போலீசார் எங்கிருந்தாலும் அந்த பெண்ணை பிடிக்க விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். பெற்ற குழந்தையை பிறந்த அடுத்த நொடியே கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாமகல்லில் பயங்கரம்...19 வயது இளைஞர் கொலை.!! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை.!!