திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞசை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி, அந்த கண்காணிப்பு அதிகாரிகள் உடனடியாக தத்தமது மாவட்டங்களுக்கு விரைந்து சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளும்படியும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
அவர்களின் பெயர் மற்றும் மாவட்டம் பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிவிப்பில்,
1. திருவள்ளுர் மரு.கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், எல்காட் நிறுவனம், சென்னை
2. காஞ்சிபுரம் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை
3. செங்கல்பட்டு கிரந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை
4. விழுப்புரம் எஸ்.ஏ. ராமன், இ.ஆப., இயக்குநர், தொழிலாளர் நலன், சென்னை
5. கடலூர் டி. மோகன், இ.ஆ.ப., இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை
6. மயிலாடுதுறை கவிதா ராமு, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை
7. திருவாரூர் டி. ஆனந்த், இ.ஆ.ப., ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை
8. நாகப்பட்டினம் ஏ. அண்ணாதுரை, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை
9. தஞ்சாவூர் எச். கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சென்னை
10. கள்ளக்குறிச்சி பி. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப., செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை.
11. அரியலூர் எம். விஜயலட்சுமி, இ.ஆப., ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை
12. பெரம்பலூர் எம். லட்சுமி, இ.ஆ.ப., ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை
என 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில், 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சி பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.