தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
.தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக IMD அறிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரும். தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.