தீபாவளி சலுகை போல தங்கம் விலை சரிவு! – சவரனுக்கு ரூ.640 குறைவு… நகை வாங்க மக்கள் உற்சாகம்..!!!
SeithiSolai Tamil October 22, 2025 07:48 AM

தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறும் இன்றைய நாளில் (அக்டோபர் 20) தங்கம் விலை சரிவை கண்டுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்த நிலையில், தற்போது 1 கிராம் தங்கம் ரூ.11,920-க்கு, ஒரு சவரன் ரூ.95,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, வெள்ளி விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,90,000-க்கும் விற்பனை ஆகியுள்ளது. தங்கம் விலை குறைந்ததையடுத்து, தீபாவளி நாளில் நகை வாங்க விரும்புவோர் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.