தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணித்த மக்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்புவதற்காக தெற்கு ரெயில்வே பல்வேறு சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவில் முன்பதிவு குறைவாக இருந்ததால், அக்டோபர் 22 முதல் 29 வரை இயக்கப்படவிருந்த 6 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி,"அக்டோபர் 22-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயம் நோக்கி புறப்படவிருந்த சிறப்பு ரெயில் (06121) ரத்து செய்யப்பட்டுள்ளது.இதேபோல், "அக்டோபர் 23-ந்தேதி மதியம் 2.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்படவிருந்த ரெயில் (06122)"வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 24 மற்றும் 26 தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்லவிருந்த செங்கல்பட்டு–திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரெயில்கள் (06153) ரத்து செய்யப்பட்டுள்ளன.அதேபோல், "திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு நோக்கி செல்லவிருந்த ரெயில்கள் (06154)"வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாகர்கோவில்–சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06054), அக்டோபர் 28-ந்தேதி காலை 9.15 மணிக்கு புறப்படவிருந்தது — அது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இதற்குப் பிரதியாக சென்னை சென்ட்ரல்–நாகர்கோவில் சிறப்பு ரெயில் (06053), அக்டோபர் 29-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படவிருந்ததும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகை போக்குவரத்து ஏற்பாடுகளில் இந்த மாற்றம் பயணிகளிடையே சற்றே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.