தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?
WEBDUNIA TAMIL October 21, 2025 01:48 PM

பயணிகளுக்கான முன்பதிவு மிகவும் குறைவாக இருந்ததால், வரும் அக்டோபர் 22 முதல் 29ஆம் தேதி வரை இயக்கப்படவிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட 6 ரயில்கள் விவரம்

1. சென்னை சென்ட்ரல் - கோட்டயம் சிறப்பு ரயில் (06121): அக்டோபர் 22ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த ரயில் ரத்து.

2. கோட்டயம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06122): அக்டோபர் 23ஆம் தேதி பிற்பகல் 2.05 மணிக்குக் கோட்டயத்தில் இருந்து புறப்பட இருந்த ரயில் ரத்து.

3. செங்கல்பட்டு - நெல்லை அதிவிரைவு சிறப்பு ரயில் (06153): அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்குச் செங்கல்பட்டில் இருந்து புறப்பட இருந்த ரயில் ரத்து.

4. நெல்லை - செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரயில் (06154): அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட இருந்த ரயில் ரத்து.

5.நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06054): அக்டோபர் 28ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட இருந்த ரயில் ரத்து.

6. சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053): அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட இருந்த ரயில் ரத்து.

இந்த ரத்து அறிவிப்பால், பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.