பிகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களில் நடைபெற உள்ளது. முதல் கட்டம் நவம்பர் 6-ஆம் தேதி 121 தொகுதிகளில், இரண்டாம் கட்டம் நவம்பர் 11-ஆம் தேதி 122 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குகள் எண்ணப்படும் தேதி நவம்பர் 14.
முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடைசி நாள் அக்டோபர் 17, திரும்பப் பெறுவது அக்டோபர் 20. இரண்டாம் கட்டத்துக்கான வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை அடுத்த வாரம், அக்டோபர் 21-ல் நடைபெறும். திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 23.
தேர்தல் களம் வெகுவாக சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சி இதுவரை 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்திய கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்ஸிய லெனினிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI-ML) ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) இன்று143 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில், வைஷாலி மாவட்டத்துக்குட்பட்ட ரகோபூர் தொகுதியில் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் நேரடியாக போட்டியிடுகிறார்.