மேட்டூர் அடுத்த மூலக்காடு பகுதியில் அமைந்துள்ள சந்தன கடத்தல் வீரப்பனின் 21 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீரப்பனின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வீரப்பன் காட்டை விட்டார் என்றனர் ஆனால் வாங்கினவர்கள் எங்கே என கேட்டால் பதில் இல்லை. வீரப்பன் சந்தன கட்டைகளை வெட்டி யானை தந்தங்களை கடத்தினார் என குற்றம் சாட்டினர . விற்றவர் காட்டில் இருந்தார், வாங்கியவர்கள் இங்கே இருந்தனர் என கேள்வி கேட்டால் பதில் இல்லை. விற்றவரை மட்டும் பிடித்தவர்கள் வாங்கியவர்களை மட்டும் பிடிக்கவில்லை என கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. அதிமுகவும் திமுகவும் வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்ட மாட்டார்கள். எங்கள் அண்ணன் தமிழரசனுக்கு மட்டும் நினைவிடம் கட்ட விட்டார்களா?. ஈழத் தமிழர்களுக்காக போராடி இறந்தவர்களுக்கு வணக்கம் செலுத்த முடிகிறதா?. ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எல்லா கட்டிடங்களுக்கும் அவரது பெயரை தான் வைக்கிறார்கள்.
என்னை பாசிஸ்ட் ஆன்டி நேஷனல் லிஸ்ட் என கூறுவது போல் தான் என் அடையாளத்தை அடிக்கிறார்கள். என்னை ஒன்னும் செய்ய முடியாமல் இருப்பதற்கான காரணம் அவர்களிடத்தில் இறுகும் துப்பாக்கி என்னிடத்தில் இல்லாததுதான். என்னுடைய வாக்கால் அவர்களை திணறடித்துக் கொண்டிருக்கிறேன். எந்த நலன் சார்ந்து இந்தியா- இலங்கை பிரதமர்கள் பேசினார்கள் என்பது தெரியவில்லை. குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது. இந்திய கடற்படை மீட்டு கொண்டு வந்தனர், ஆனால் இந்திய கடற்பறையினர் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழக முதல்வர் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறார். 40 மக்களவை உறுப்பினர்கள் இருந்தும் அவர்களை வைத்து பேசி தச்சத்தீவைமீட்டு எடுக்கலாம். செந்தூர் ஆப்ரேஷனை வாழ்த்தி போணி நடத்திய முதல்வர் கச்சத்தீவை மீட்க பெரிய மாநாடு நடத்தி வலியுறுத்த முடியாதா? கச்சதீவை கொடுக்கும் போது உங்கள் ஆட்சிதான் நடந்தது, கச்சத்தீவை கொடுத்த கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளார்கள். எத்தனை நாட்களுக்கு தான் நாடகம் நடத்துவார்கள். கடிதம் மட்டும் 70 முறை எழுதுகிறார். இவர் முதல்வரா அல்லது அஞ்சல் துறை தலைவரா?
அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு திராவிடம் என்றால் என்ன என விளக்கிப் பேச சொல்லுங்கள். அதன் பின்பு வாரிசை பற்றி பேசலாம். திராவிடம் என்றால் என்ன என தெரியாமல் இனம், மொழி, மதம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திராவிடம் என்றால் என்ன என ஒரு முடிவுக்கு வர சொல்லுங்கள். தமிழர் அல்லாத வாழ்வதற்கும் ஆழ்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்ட ஒன்றுதான் திராவிடம். பாதுகாப்பாக வாழ்வதற்கு வாழ்வதற்கும் கொண்டுவரப்பட்டது தான் திராவிடம். இதனை மறுப்பவர் எதிர்ப்பவர்கள் என்னோட வாதிட வரலாம். தமிழர் அல்லாதோர் இங்கு பாதுகாப்பாக வாழ்வதற்கும், ஆள்வதற்கும் வசதியாக கொண்டுவரப்பட்டதே திராவிடம். உதயநிதி செங்கல் தூக்கிக்கொண்டு சுற்றினார். பழனிச்சாமி அல்வாவை தூக்கிக்கொண்டு சுற்றி கொண்டு வருகிறார். நடிகருக்கு மன்றம் அமைக்கும் போது அண்ணாமலைக்கு மன்றம் அறிவிக்க கூடாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.