தீபாவளி பண்டிகையுடன் இணைந்த முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்று கேதார கௌரி விரதம் ஆகும். இவ்விரதம், சிவபெருமானின் அருளை பெற அன்னை பார்வதி தேவி மேற்கொண்ட கடுமையான நோன்பாகும். இதனால், இதை அனுஷ்டிக்கும் நம்பிக்கையாளர்கள் சிவசக்தியின் பரிபூரண அருளைப் பெறுவார்கள் என்பது காலம் காலமாக நம்பப்படும் ஐதீகம்.
‘கேதாரம்’ என்பது இமயமலையைக் குறிக்கும்; ‘கௌரி’ என்பது அன்னை பராசக்தி. எனவே, இமயத்தில் வாழும் சிவனுக்கும், அவரின் அருளைப் பெற விரதம் மேற்கொண்ட கௌரிக்கும் இடையிலான தெய்வீக சம்பந்தத்தை நினைவுபடுத்தும் விரதமிது. புராணக் கதையின்படி, பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வணங்கியதால் வருந்திய பார்வதி, சிவனுடன் ஒன்றிணைய விரதம் மேற்கொண்டார். பூலோகத்தில் வால்மீகி முனிவரின் வழிகாட்டுதலின் கீழ், அவர் மேற்கொண்ட விரதம்தான் இன்றும் கேதார கௌரி விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த விரதம் புரட்டாசி வளர்பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி தேய்பிறை அமாவாசை (தீபாவளி) வரை 21 நாட்கள் நடைபெறும். தினமும் ஆலமரத்தின் அடியில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து, வெல்லம், மஞ்சள், சந்தனம், விபூதி, வாழைப்பழம், தேங்காய், அதிரசம், வில்வ இலைகள் போன்றவற்றால் பூஜை செய்யப்படுகிறது. 21 இலைகளைக் கொண்ட கயிற்றில் தினமும் ஒரு முடிச்சு போட்டு, 21ம் நாளில் அதை அணிவது வழக்கம். இது பரமனின் பரிபூரண அருளையும் சகல நன்மைகளையும் தரும் என நம்பப்படுகிறது.
விரதம் நிறைவு நாளில், அம்மியும் குழவியுமாக சிவசக்தி வடிவத்தை ஆவாஹனம் செய்து, சந்தனம், குங்குமம், மலர், நறுமணப் பொடிகள் கொண்டு அலங்கரித்து, சிவ அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். விரத கயிறு கட்டி ஆசீர்வாதம் பெறுவதன் மூலம் சிவசக்தியின் பேரருளும், செல்வ வளமும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.இவ்வாறு, கேதார கௌரி விரதம் தீபாவளி காலத்தில் ஆன்மிக ஒளி பரப்பும் சிறப்பு வழிபாடாக, பெண்களும் குடும்பத்தினரும் இணைந்து கடைப்பிடிக்கும் புண்ணிய விரதமாக திகழ்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!